பழையசென்னைப் படமெடுத்த இயக்குநர், தன் காதலுக்கு இடையூறு என்பதால் தன்னிடம் வேலைபார்த்த உதவிஇயக்குநர்கள் அவ்வளவு பேரையும் மாற்றிவிட்டாராம்.
கல்லூரிமாணவ நடிகரின் மகன் நடிக்கும் ட்ரீம் படத்தை இயக்கும் தயாரிப்பாளர், ஏற்கெனவே இயக்கியவர் எடுத்த காட்சிகளையும் தூக்கிப் போட்டுவிட்டு புதிதாகப் படம் பிடித்தாராம். இதனால் செலவு எகிறிவிட்டதாம்.
சந்தனமான நகைச்சுவை நடிகர்,ஒரு படத்துக்கு டிராக் எழுதினால் ஒரு ரேட், வெறுமனே வந்து நடித்தால் ஒரு ரேட் என்று சொல்லி ஏகத்துக்கும் கல்லா கட்டுகிறாராம்.
விசாலமான நடிகர் தற்போது நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நாட்களைத் திட்டமிடுவதில் நிறைய சொதப்பல்களாம்.இதனால் தயாரிப்பாளர் மீது கடுப்பில்இருக்கிறாராம் நாயகன்.