சிரஞ்சீவி புகழ்ந்த நடிகை



Vannathirai magazine, Vannathirai weekly magazine, Tamil Magazine Vannathirai, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

        அனுஷ்கா ஷெட்டியை வீட்டில் எந்தப் பெயரில் செல்லமாக கூப்பிடுவார்கள்?
என்.அபிஷேக்,
மானாமதுரை.

ஸ்வீட்டி என்றும், தொம்முலு என்றும் கூப்பிடுகிறார்கள்.

அமலாபாலுக்கு செல்லப் பெயர் இருக்கிறதா?
எஸ்.ஜெகன்,
தென்காசி.

அவரது வீட்டில் உள்ளவர்களும் தோழிகளும் அனகா என்று கூப்பிடுகிறார்கள்.

பாலா இயக்கும் ‘எரிதனல்’ படத்தில் எமி.ஜேக்சனுக்கு என்ன கேரக்டர்?
அன்பு தம்பிரான்,
குலசேகரம்.

அவர் ஒர் முக்கிய கேரக்டரில் நடிப்பதாக இருந்தது. ஆனால், இப்போது எந்த கமிட்மென்டும் செய்யப்படவில்லை என்று சொல்கிறார்கள்.

சமீரா ரெட்டியின் தாய் மொழி எது?
செல்வம்,
தஞ்சாவூர்.

சமீராவின் அப்பா தெலுங்குக்காரர். அம்மா கன்னடக்காரர். ஆனால் சமீரா தப்பித் தவறியும் பொது விழாக்களில் தன் தந்தை மொழியான தெலுங்கையும் பேசுவதில்லை. தாய் மொழியான கன்னடத்தையும் பேசுவதில்லை. எங்கேயும் எப்போதும் ஆங்கிலம் தான். இந்திப் படங்களை விட தமிழில் தான் அதிகம் நடிக்கிறார். ஆனால், இந்திப்பட விழாக்களில் இந்தி பேசி பாலிவுட்டில் தன்னை தக்கவைத்துக் கொள்கிறார்.

‘மங்காத்தா’ வெங்கட்பிரபு என்ன செய்கிறார்?
 ரகுபதி,
கடலூர்.

அடுத்த படத்துக்கான கதை விவாதத்தை பாண்டிச்சேரியில் நடத்தியுள்ளார். படத்துக்கான ‘புரோமா’ வீடியோவையும் சாம்பிள் எடுத்து பார்த்துள்ளார். வழக்கம் போல் இந்தப் படத்திலும் நான்கைந்து ஹீரோக்கள் நடிக்கவுள்ளார்கள். ஏற்கெனவே விஷால், ஆர்யா, ஜீவா, ‘ஜெயம்’ரவி ஆகியோர் ஓ.கே. சொல்லி விட்டார்களாம்.

‘அரவான்’ படம் தன்ஷிகாவுக்கு திருப்பு முனையாக இருக்குமா?
மகேஷ்,
திண்டிவனம்.

‘அரவான்’ படம் தன்ஷிகாவுக்கு தமிழில் நிலையான இடத்தை கொடுக்கும் என்றுதான் சினிமா பார்வையாளர்கள் பேசிக் கொள்கிறார்கள். அதற்கு ஏற்ப அவரும் அந்தப்படத்துக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துள்ளார். சுமார் ஒன்றரை வருடம் வேறு எந்தப் படத்தையும் ஒப்புக் கொள்ளாமல் இருக்கிறார். விடிய விடிய படப்பிடிப்பு நடைபெற்றாலும் காலை 5 மணிக்கெல்லாம் படப்பிடிப்புத் தளத்தில் ஆஜராகிவிடுவாராம். படப்பிடிப்புக்கு எவ்விதத்திலும் இடையூறு இல்லாமல் பிரச்னை தராத ஆர்ட்டிஸ்ட் என்று சினிமா இண்டஸ்ட்ரியில் பெயர் எடுத்தவர். சமீபத்தில் ‘அரவான்’ படத்தின் தெலுங்குப் பதிப்பான ‘ஏகவீரா’ ஆடியோ வெளியீடு ஐதராபாத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிரஞ்சீவி நம்மூர் தன்ஷிகாவை பாராட்டு மழை பொழிந்து தெலுங்கிலும் நல்ல தொடக்கத்தை ஆரம்பித்துக் கொடுத்துள்ளார். திருப்பு முனைக்கு இது போதாதா மகேஷ்!?