விளம்பரப் படங்களில் நடிக்க த்ரிஷா ஒரு நாள் வாங்கும் சம்பளம் எட்டு லட்ச ரூபாயா...! படிக்க சொல்லவே மயக்கம் வந்திடுச்சு தலைவா...!
வீ.நாதன், சென்னை-26.
‘பிறர் சிரிக்க வாழ வேண்டும் என்பது என் கொள்கை’ என்று எம்.எஸ்.பாஸ்கர் சொல்லி யிருப்பதை வரவேற்கிறேன்.
டி.கவிதா, தஞ்சாவூர்.
‘கழுகு’ படத்துல ஹீரோ கொடைக்கானல் பிணங்களை அள்ளுகிறார். டீ கடையில் வேலை செய்யும் ஹீரோயின் மனதையும் அள்ளுகிறார். படம் பார்க்க ஆவலை தூண்டிவிட்டிங்க சார்!
ஜி.நரண், திருச்சி.
பல சினிமா துளிகளை மழைத்துளி போல் சிதறியடித்து படிப்பவர்களின் நெஞ்சங்களில் பரவசத்தை ஏற்படுத்துகிறது ‘அடடே அப்டியா?’ பகுதி.
சு.சுந்தரி, புதுச்சேரி.