‘மிருகம்’, ‘நெல்லு’ ஆகிய படங்களைத் தயாரித்த கார்த்திக்ஜெய் கதாநாயகனாக நடித்திருக்கிறார். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் கீழவெண்மணியில் நடந்த நிகழ்வை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ‘நெல்லு’ படத்தையே ப்ளாஷ்பேக்காகக் காட்டிவிடுகிறார்கள். படத்தின் தலைப்புக்கு அதை வைத்துத்தான் நியாயம் செய்திருக்கிறார்கள்.
சமகாலத்தில் தொழிற்சாலை அதிபர் செய்யும் கொடுமைகளை எதிர்த்துப் போராடுகிறார் கார்த்திக்ஜெய். படத்தை இயக்கியிருக்கும் கதாக.திருமாவளவனும் போராளியாக நடித்திருக்கிறார். கடைசியில் ஆயுதங்களைக் கீழேபோட்டு விட்டுவிடுவதன் மூலம் மக்களுக்கு நல்ல கருத்தைச் சொல்லிய திருப்தி கொள்கிறார்கள். பெரோஸ்கானை நடிக்க வைத்துவிட்டு அவருடைய படத்திலிருந்து ஒரு பாடலையும் பயன்படுத்தியிருப்பது புதிய யோசனை. படமெடுத்து, பாடம் நடத்தியிருக்கிறார் இயக்குனர் கதாக.திருமாவளவன்.