நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளிவந்திருக்கும் சுவாமி அய்யப்பன் மகிமையை பற்றிச் சொல்லும் படம். அப்பா கந்து வட்டிக்காரர். மகன் அய்யப்ப பக்தன். அப்பாவின் பணத்திமிரை மலைக்கு மாலைபோட்டு சென்று மாற்றும் இளைஞன். வங்கியில் கடன் வாங்கி திருப்பி கட்டாமல் ஏமாற்றுபவர்கள் அய்யப்பன் அருளால் திருந்துகிறார்கள். மக்களை ஏமாற்றும் போலி மந்திரவாதியை அய்யப்பன் திருத்துகிறார். கணவன் மனைவி பிரச்சினையை தீர்த்து வைக்கும் அய்யப்பன் என பல கதைகள் மூலம் அய்யப்பன் புகழ் பாடும் படம். இந்த கதையை சொல்லும் குருசாமியே அய்யப்பன்தான் என்பது கிளைமாக்ஸ் திருப்பம்.
‘பாய்ஸ்’ மணிகண்டன், பிரேம்குமார், உதயதாரா, நடித்திருக்கிறார்கள். ‘மைனா’ விதார்த் பக்தி பாடலுக்கு ஆடியிருக்கிறார். சரவணன் கருப்பசாமியாக வந்து பக்தர்களுக்காக சண்டை போடுகிறார். வசந்தமணி 5 பாடல்களுக்கு இசை அமைத்திருக்கிறார். பக்தி மணம் கமழ தயாரித்து இயக்கியிருக்கிறார் கே.ஆர்.விஷ்ராந்த்.