இரண்டெழுத்து விருது இயக்குநரின் படத்தில் நடிக்கும் கல்லூரிமாணவ நடிகரின் மகனுக்கு தலையை பாதி மொட்டை அடித்து விட்டுவிட்டார்களாம். இந்தப்படம் முடியும்வரை எந்த நிகழ்ச்சிக்கும் போகக்கூடாது என்றும் இயக்குநர் உத்தரவு போட்டிருக்கிறாராம்.இதனால் நடிகரின் இப்போதைய படத்தின் பாடல் வெளியீடு நிகழ்ச்சிக்குக்கூட வரஇயலாது என்கிறாராம்.
சீட்டாட்டப் படம் நன்றாக ஓடியதின் விளைவாக அடுத்த படத்துக்கு பெரிய ஐந்து அதிகப்படுத்தினாராம் அந்த இயக்குனர். இப்போது அதற்கடுத்த படத்துக்காகப் போகிறவர்களிடம் மேலும் பெரிய மூன்று அதிகம் வேண்டும் என்கிறாராம்.இதனால் போகிறவர்கள் தல கிறுகிறுத்துப் போயிருக்கிறார்களாம்.