சரத்குமார்- ஆண்ட்ரியா நடித்த ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ ஆங்கிலப்படத்தின் தழுவல் என்கிறார் என் நண்பன். உண்மையா சி.பி?எஸ்.மாதவன்,
திருத்தணி.
ஜேம்ஸ் ஸீகல் எழுதிய ‘டீரெய்ல்டு’ நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம்தான் ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’.
அமலா பாலின் வயது என்ன தலைவா?கே.பாபு,
திருச்சி.
1991 அக்டோபர் 26 அவரது பிறந்த தேதி.
நடிகைகளுக்கு முதுகு அழகுப் போட்டி வைத்தால் யார் நம்பர் ஒன்&ஆக வருவார்?ஜே.அனிதா,
திருப்பூர்-3.
முன்பு குஷ்பு. இபோது அனுஷ்கா.
சிரிப்பழகி சினேகாவுக்கு சொந்த ஊர் எது சிபி?ஆர்.மனோஜ்,
திருப்பூர்.
மும்பையில் பிறந்து, துபாயில் வளர்ந்த சினேகாவுக்கு சொந்த ஊர், பலாப்பழத்துக்கு பெயர் பெற்ற பண்ருட்டி.
ஏ.ஆர்.ரஹ்மானின் நிஜப்பெயர் என்ன சிபி? ஏ.ஆர்.என்பதன் விரிவு என்ன?செல்வ கணேஷ்,
கன்னியாகுமரி.
திலீப்குமார் என்பது அவரது இயற்பெயர். ஏ.ஆர். என்பதன் விரிவு அல்லா ரக்கா.
டைரக்டர் ஷங்கர் என்ன படித்திருக் கிறார்?கே.சுபாஷ்,
திருவண்ணா மலை.
சென்னை தரமணியில் உள்ள சென்டிரல் பாலிடெக்னிக் கல்லூரியில் மெக்கானிக்கல் எஞ்சினியரிங் முடித்தவர்.
பாரதிராஜா வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு?பரமகுரு,
ராஜபாளையம்.
1963ல் சுகாதாரத்துறை இன்ஸ்பெக்டராக இருந்தார். அப்போது அவர் வாங்கிய மாத சம்பளம் ரூ.75.
ஷெரின் எப்போது எங்களுக்கு தரிசனம் தருவார்?என்.பாலாஜி,
கோபிசெட்டிபாளையம்.
ஷெரின் நடித்த ‘டேஞ்சர்’ தெலுங்குப்படம் ‘அபாயம்’ என்று பெயரில் தமிழ் பேச வருகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஷெரினை தமிழ் ரசிகர்கள் கண்டு களிக்கலாம்.
பாடகர் கிரிஷ் தயாரித்துள்ள ஆல்பம் பற்றி தகவல்?சே.துரைசாமி,
பழனி.
பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளியிடுவதற்காக பாடகர் கிரிஷ் ‘ஃபார் எவர் இன் லவ்’ என்ற ஆல்பத்தை தயாரித்துள்ளார். இதற்கான மிக்ஸிங் பணிகளை சமீபத்தில் லண்டனுக்குச் சென்று செய்து வந்திருக்கிறார். ஷங்கர் இயக்கத்தில் ‘நண்பன்’ படத்துக்காக ‘என் ஃப்ரண்ட போல யாரு மச்சான்...’ பாடலைப் பாடிய போது இந்த ஆல்பத்துக்கான ஐடியா வந்ததாம்.