ஆக்‌ஷன் கிங்கை இயக்கும் பாட்டு கிங்!



‘ஸ்ட்ராபெரி’, ‘ஆருத்ரா’ படங்களுக்குப் பிறகு பா.விஜய் இயக்கும் படம் ‘மேதாவி’. இந்தப் படத்தை சு.ராஜா தயாரிக்கிறார். அர்ஜுன், ஜீவா இணைந்து நடிக்கும் இதில் நாயகியாக ராக்‌ஷி கன்னா நடிக்கிறார்.சாரா, ‘கைதி’ படம் தினா, ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா சங்கர் , ராதாரவி, ஒய்.ஜி.மகேந்திரன், அழகம்பெருமாள், ரோகிணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.  

‘ஸ்ட்ராபெரி’ படத்தில் தனியார் பள்ளிகளின் லாப நோக்கம், ‘ஆருத்ரா’வில் சிறுமிகளின் பாதுகாப்பு என்று சமூக சிந்தனையுடன் படங்களை இயக்கிய பா.விஜய் இந்தப் படத்திலும் சமூகவிழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் மிக அவசியமான ஒரு கருத்தை வலியுறுத்தியுள்ளாராம்.

ஆக்‌ஷன், க்ரைம்  பின்னணியில் உருவாகும் இதில் அர்ஜுனுக்கு என்று பிரத்யேக சண்டைக் காட்சிகள் உள்ளதாம். கொரோனோ தடைக் காலத்தில் குழு விவாதத்துக்கு வாய்ப்பு இல்லாத காரணத்தால் தனிமையில் கதையை மெருகேற்றி வருகிறாராம் பா.விஜய்.