ஜிகிரி தோஸ்து!



தயாரிப்பாளர், விநியோகஸ்தர், நடிகர் என்று பன்முகம் கொண்டவர் ஆர்.கே. சுரேஷ். இயக்குநர் பாலாவால் ‘தாரை தப்பட்டை’ படத்தில் பட்டை தீட்டப்பட்டவர். மீண்டும் பாலாவின் புதிய படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படம் இவருடைய கேரியரில் திருப்புமுனையாக இருக்கும் என்று கருதுகிறார்.

‘வேட்டை நாய்’ படத்தில் பிரதான நாயகன் வேடம் ஏற்று நடித்துக் கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் ‘அமீரா’ படப்பிடிப்பு முடிவடைய உள்ளதாம்.தமிழ், மலையாளத்தைத் தொடர்ந்து தெலுங்கு, கன்னட மொழிகளிலும் கால் பதித்துள்ள இவர் புதிதாக நான்கு படங்களில் வித்தியாசமான வேடங்களில் நடிக்கவுள்ளாராம்.

சிவகார்த்திகேயன் நடித்த ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்தில் சமுத்திரக்கனியுடன் தோன்றும் ஃபிளாஷ்பேக் காட்சியில் வரும் ‘ஜிகிரி தோஸ்து’ பாடல் காட்சியில் நடித்தது அவருக்குப் பரவலான பெயரைப் பெற்றுக் கொடுத்ததாம்.

‘‘லாக்டவுன் சமயத்தில் என்னுடைய பிறந்த நாள் வந்ததால் நண்பர்களை, நலம் விரும்பிகளை, ரசிகர்களைச்  சந்திக்க வாய்ப்பில்லாமல் போய்விட்டது. மக்கள் அனைவரும் சகஜ நிலைக்குத் திரும்புவது ஒன்றுதான் அனைவருக்குமான கொண்டாட்டமாக இருக்கும்’’ என்கிறார் ஆர்.கே.சுரேஷ்.

- ரா