தெலுங்கில் அப்புக்குட்டி!



‘‘இந்தச் சோதனையான காலத்தில்  ஏதாவது உதவி செய்யுங்கள் என்று கேட்பவர்களுக்கு என்னளவில்  ஏதாவது செய்து கொண்டிருக்கிறேன். எல்லாரும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும் என்பதுதான் என்னுடைய பிரார்த்தனை’’ என்கிறார் அப்புக்குட்டி.

‘வாழ்க விவசாயி’, ‘வெட்டிப்பசங்க’, சசிகுமார் நடிக்கும் ‘பரமகுரு’, ‘வல்லவனுக்கு வல்லவன்’, ‘பூம்பூம் காளை’, ‘வைரி’, ‘ரூட்டு’, ‘இந்த ஊருக்கு என்னதான் ஆச்சு’ போன்ற படங்கள் அப்புக்குட்டியின் கைவசம் உள்ளன. முதன்முறையாக தெலுங்கிலும் களமிறங்குகிறார்.

‘வாழ்க விவசாயி’ படத்தை  மறக்க முடியாது. இந்தப் படம் எப்போது வெளியானாலும் கொண்டாடப்படும். ஏனென்றால் மக்கள் விவசாயத்தின் முக்கியத்துவத்தை இப்போதுதான் உணர்ந்திருக்கிறார்கள். படம் வெளியாகும் அந்த நாளுக்காகக் காத்திருக்கிறேன்’’ என்கிறார் அப்புக்குட்டி.