கம்பு - நட்ஸ் அடை



என்னென்ன தேவை?

கம்பு (காட்டு கம்பு என்று கேட்டு வாங்கவும்) - 2 கப்,
புழுங்கல் அரிசி - 2 கப்,
துவரம் பருப்பு - 1/2 கப்,
கடலைப் பருப்பு - 1/2 கப்,
கொள்ளு - 1/4 கப்,
உளுந்து - 1/4 கப்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
காய்ந்த மிளகாய் - 6 (காரத்துக்கு தேவையான அளவு),
சீரகம் - 1 டீஸ்பூன்,
பெருங்காயம் - 1/2 டீஸ்பூன்,
பூண்டு - 4 பல்,
பொடித்த கறிவேப்பிலை - சிறிது,
இஞ்சி - 1 துண்டு,
மஞ்சள் தூள் - சிறிது,
வெந்தயம் - 2 டீஸ்பூன்,
தூளாக்கிய வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன்,
பச்சைப் பயறு (தோலுடன்) - 1/2 கப்.

எப்படிச் செய்வது?


அரிசி, கம்பு, பருப்புகள், கொள்ளு ஆகியவற்றை தனித்தனியாக இரவே ஊற வைக்கவும். எல்லாவற்றையும் இட்லிக்கு அரைப்பதைவிட சிறிது கரகரப்பாக அரைக்கவும். இத்துடன் எண்ணெய் தவிர பெருங்காயம் மற்றும் அனைத்தையும் பொடித்து சேர்த்து, உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கி 10 நிமிடம் வைத்திருக்கவும். கெட்டியாக இட்லி மாவு பதத்தில் மாவுக் கலவை இருக்க வேண்டும். இதை அடையாக மிதமான தீயில் தோசைக்கல்லில் ஊற்றி, எண்ணெய் விட்டு திருப்பிப் போட்டு சுட்டு எடுக்கவும். சூடாக வெங்காயச் சட்னியுடன் பரிமாறவும்.