நட்ஸ் புட்லி



என்னென்ன தேவை?

மேல் மாவுக்கு...

பச்சரிசி மாவு - 2 கப்,
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
தண்ணீர் - 2 கப்,
உப்பு - தேவைக்கு.

பூரணத்துக்கு...

பொடித்த  சோயா   சங்க்ஸ் - 1/4 கப் (நன்றாகக் கழுவி, கொதிக்கும் தண்ணீரில் போட்டு 5 நிமிடங்கள் ஊறியதும், ஒட்டப் பிழிந்து வைக்கவும்),
வறுத்துப் பொடித்த வேர்க்கடலை - 1/4 கப்,
பொடித்த அல்லது துருவிய சோயா பனீர் அல்லது டோஃபு - 1/4 கப்,
துருவிய தேங்காய் - 1/4 கப்,
வறுத்துப் பொடித்த எள் - 1 டேபிள்ஸ்பூன்,
பச்சை மிளகாய் - 2,
கிர்ணிப்பழ விதை - சிறிது,
பொடித்த காய்ந்த மிளகாய் - 1/4 டீஸ்பூன்,
சீரகம் - 1/4 டீஸ்பூன்,
பொடித்த கொத்தமல்லி - தேவைக்கு,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

2 கப் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் அரிசி மாவு, எண்ணெய் சேர்த்துப் பிசைந்து வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, பூரணத்துக்கு உள்ள பொருட்கள் அனைத்தையும் போட்டு வதக்கி ஆற வைக்கவும். மேல் மாவில் இருந்து ஒரு எலுமிச்சை அளவு உருண்டை எடுத்து செப்பு மாதிரி செய்து அதன் உள்ளே பூரணத்தை தேவையான அளவு வைக்கவும். அந்த உருண்டையை மூட்டை பை அல்லது கூடை மாதிரியான வடிவத்தில் செய்து எல்லாப் பக்கமும் இழுத்துப் பிடித்து அழுத்தி வைக்கவும். மீதமிருக்கும் மாவையும் பூரணத்தையும் இப்படிச் செய்யவும். இவற்றை இட்லி தட்டில் ஆவியில் வேக வைத்து எடுத்து, புதினா அல்லது மல்லி சட்னியுடன் பரிமாறவும். புட்லி என்றால் பொட்டலம் என்று பொருள்.