பிரெட் பர்ஃபி



என்னென்ன தேவை?

ஃப்ரெஷ் பிரெட் தூள் - 2 கப்,
துருவிய தேங்காய் - 1/2 கப்,
ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்,
சர்க்கரை - 1/2 கப்,
நெய் - 4 டீஸ்பூன்,
ரோஸ் எசென்ஸ் - சில துளிகள்,
வெள்ளித் தாள் - சில,
கன்டென்ஸ்டு மில்க்  - 1/2 கப்,
உடைத்த நட்ஸ், விதைகள், டிரை ஃப்ரூட்ஸ் - 3/4 கப்,
திராட்சை, பொடித்த செர்ரி பழங்கள் - தேவைக்கு,
பால் - 1 கப்.

எப்படிச் செய்வது?

வெறும் கடாயில் நட்ஸ், உலர்ந்த பழங்கள், விதைகள் அனைத்தையும் லேசாக வறுத்துக் கொள்ளவும். விருப்பப்பட்டால் நெய்யில் வறுத்துக் கொள்ளலாம்.  பாலில் பிரெட் தூள் சேர்த்து கலந்து வைக்கவும். ஒரு நான்-ஸ்டிக் பாத்திரத்தில் மிதமான தீயில் நெய்யை விட்டு சூடாக்கி பிரெட் விழுதை சேர்த்து கிளறவும்.

நன்கு சுருண்டு வரும் போது தேவையானால் சிறிது நெய் சேர்க்கலாம். இத்துடன் சர்க்கரை, கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து நன்கு கிளறவும். தேங்காய், எசென்ஸ் சேர்க்கவும். பிறகு, பர்ஃபி கலவையில் உலர்ந்த பழங்கள், நட்ஸ், விதைகள் சேர்க்கவும். கொஞ்சம் தனியாக அலங்கரிக்க எடுத்து வைக்கவும். மீண்டும் கிளறி, ஏலக்காய் தூளை தூவி இறக்கி கலக்கவும். பர்ஃபி கலவையை நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆற விடவும். ஆறியதும் வெள்ளி சரிகையை அதில் இட்டு, மீதி உள்ள நட்ஸை தூவி துண்டுகள் போடவும்.