குங்குமப்பூ - டிரை ஃப்ரூட்ஸ் - நட்ஸ் புலாவ்



என்னென்ன தேவை?

முந்திரி, பாதாம், வால்நட்ஸ் எல்லாம் கலந்தது - 50 கிராம்,
பாசுமதி அரிசி - 1 ஆழாக்கு,
குங்குமப்பூ - 1 சிட்டிகை (பாலில் ஊற வைத்தது),
திராட்சை - 20, உப்பு,
நெய் - தேவைக்கு,
பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 2,
பிரிஞ்சி இலை - 1,
சர்க்கரை - 1/2 டீஸ்பூன்,
மிளகு - 4,
ஷாஹி ஜீரா - 1/4 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?


அரிசியை நன்கு கழுவி 10 நிமிடம் ஊற விடவும். குக்கரில் நெய் விட்டு நட்ஸை வதக்கவும். பாதி வறுபட்டதும் பிரிஞ்சி இலை, ஷாஹி ஜீரா, பட்டை, லவங்கம், ஏலக்காய், மிளகு சேர்க்கவும். அரிசியை சேர்த்து வறுத்து, இத்துடன் திராட்சையும் சேர்க்கவும். இதை சிறிது நேரம் வதக்கி 1 1/2 ஆழாக்கு சூடான தண்ணீர் சேர்த்து, பாலில் ஊற வைத்த குங்குமப்பூ சேர்த்து சர்க்கரை, தேவையான உப்பு சேர்த்து குக்கரை மூடி விடவும். மிதமான தீயில் வேக வைத்து ஒரு விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு, சில நிமிடங்கள் கழித்து திறக்கவும். 1 டீஸ்பூன் நெய்யை மேலாக ஊற்றி, விருப்பப்பட்டால் வறுத்த நட்ஸ் தூவி சூடாகப்
பரிமாறவும்.

நட்ஸ் சாஃப்டாக இருக்க வேண்டுமா?

கரகரப்பாக நட்ஸை முதலில் சேர்ப்பதற்கு பதில், வறுத்து எடுத்த பின் பரிமாறும் போது சேர்த்துக் கிளறியும் சேர்க்கலாம். கமகம வாசனை யுடன் இருக்கும் இந்த புலாவ்!