கேரட் - நட்ஸ் மஃபின்ஸ்



என்னென்ன தேவை?

கோதுமை மாவு - 1 1/2 கப்,
பேக்கிங் சோடா - 1/2 டீஸ்பூன்,
பேக்கிங் பவுடர் - 1/4 டீஸ்பூன்,
ஜாதிக்காய் தூள், சுக்குத் தூள், பட்டைத் தூள் - தலா 1 சிட்டிகை,
உப்பு - 1/4 டீஸ்பூன்,
வெண்ணெய் - 1 டீஸ்பூன்,
தேங்காய் எண்ணெய் (சிறிது சூடாக இருக்க வேண்டும்) - 2 டேபிள்ஸ்பூன்,
பொடித்த பிரவுன் சர்க்கரை - 1/2 கப்,
குழைத்த வாழைப்பழம் - பாதி,
வெனிலா எசென்ஸ் - சிறிது,
ஆப்பிள் விழுது - 1 கப்,
துருவிய கேரட் - 3/4 கப்,
அலங்கார கப்புகள் (பேப்பர் கப்) - தேவைக்கு,
உடைத்த முந்திரி - சிறிது,
பட்டர் பேப்பர் - சிறிது,
வெண்ணெய் அல்லது எண்ணெய் - சிறிது.

எப்படிச் செய்வது?

ஆப்பிள் விழுதை 1 டீஸ்பூன் வெண்ணெயில் கிளறி இறக்கி ஆற விடவும். கோதுமை மாவு,   பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் ஆகியவற்றைச் சேர்த்து சலித்துக் கொள்ளவும். கோதுமை மாவை ஒரு தட்டில் கொட்டி, அதன் மத்தியில் பள்ளமாக ஆக்கி பள்ளத்தில் வாழைப்பழ விழுது, ஆப்பிள் விழுது, துருவிய கேரட், தூள்கள், பிரவுன் சர்க்கரை, சிறிது சூடான தேங்காய் எண்ணெய், உப்பு எல்லாவற்றையும் சேர்த்து ஒரு விழுதாகக் கலக்கவும்.

ஒரே பக்கமாக கலந்து மஃபின்ஸ் கப்புகளில் 3/4 பாகம் வரை ஊற்றவும். மாவு விழுதை கப்புகளில் ஊற்றுவதற்கு முன் பட்டர் பேப்பர் வைக்க வேண்டும். கப்பில் சிறிது வெண்ணெய் அல்லது எண்ணெய் தடவி விழுதை ஊற்றி, கேரட்டையோ, முந்திரி யையோ சிறிது தூவி அலங்கரித்து மஃபின்ஸை மைக்ரோவேவ் அவனில் 20 நிமிடம் பேக் செய்யவும்.