பாப்கார்ன் ஃப்ரிட்டர்ஸ்



என்னென்ன தேவை?

பெரிய உருளைக்கிழங்கு - 2,
சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 2,
பொடித்த இஞ்சி - சிறிது,
துருவிய கேரட் - 1,
துருவிய சீஸ் - 1/4 கப்,
பொடித்த கார்ன் ஃப்ளேக்ஸ் - 1 கப்,
மைதா - 4 டீஸ்பூன்,
சோள மாவு - 4 டீஸ்பூன்,
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்,
மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன், 
பொடித்த   பூண்டு - 2 பல்,
பொடித்த கொத்தமல்லித்தழை - சிறிது,
பிரெட் துண்டு - 2,
பொடித்த பச்சை மிளகாய் - 2,
பொடித்த முந்திரி, பாதாம் - தலா 2,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு. 

எப்படிச் செய்வது  ?

உருளைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேக வைத்து மசித்துக் கொள்ளவும். இத்துடன் 2 பிரெட் துண்டுகளை பொடித்துச் சேர்க்கவும். உப்பு, மிளகாய் தூள், பூண்டு, இஞ்சி, மிளகுத் தூள், கொத்த மல்லி, சீஸ், நட்ஸ், கேரட், பச்சை மிளகாய் எல்லாவற்றையும் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து பின் உருட்டி உருண்டையாக வைக்கவும். மைதா, சோள மாவைக் கரைத்து, அதில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலக்கவும். இந்த உருண்டைகளை அதில் தோய்த்து, கார்ன் ஃப்ளேக்ஸில் புரட்டி ஃபிரிட்ஜில் 1/2 மணி நேரம் வைத்து எடுக்கவும்.

எண்ணெயை காய வைத்து, மிதமான சூட்டில் உருண்டைகளை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். தேவைப்பட்டால் அதன் மேல் பூண்டு பவுடர், வெங்காயப் பவுடர் தூவலாம். ஒரு பல் குச்சியால் குத்தி அலங்கரித்தும் பரிமாறலாம். இதற்கு பூண்டு சட்னி, புதினா சட்னி சுவையாக இருக்கும். சீஸிலேயே உப்பு இருக்கும். அதனால், உப்பை அளவு பார்த்து சேர்க்கவும்.