சிறுதானிய நட்ஸ் பக்கோடா



என்னென்ன தேவை?

ராகி மாவு - 2 கப்,
கடலை மாவு - 1 கப்,
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்,
முந்திரி, வேர்க்கடலை என பொடித்த நட்ஸ் - தலா 1 டேபிள்ஸ்பூன்,
சோடா உப்பு - 1 சிட்டிகை,
மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கிய முட்டைக்கோஸ் - 1/2 கப்,
நீளவாக்கில் நறுக்கிய குடை மிளகாய் - 1/4 கப்,
கறிவேப்பிலை - சிறிது,
கொத்தமல்லி - சிறிது,
வெள்ளை எள் - 1 டீஸ்பூன்,
லேசாக வறுத்த ஓட்ஸ் - 1/2 கப்,
இடித்த  பச்சை மிளகாய் - 4,
பொடித்த இஞ்சி - சிறிது,
பொடித்த வெங்காயம் - 1,
உப்பு, கடலை எண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?


ஓட்ஸ், எண்ணெயைத் தவிர, ராகி மாவு, கடலை மாவுடன் மற்ற எல்லாவற்றையும் ஒவ்வொன்றாகக் கலக்கவும். கலந்ததும் சூடாக 2 டேபிள்ஸ்பூன் எண்ணெயை அதில் ஊற்றி, கெட்டியாக பக்கோடா மாவு பதத்துக்குக் கலக்கவும். பிறகு கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, ஓட்ஸின் மேல் புரட்டி எடுத்து, சூடான கடலை எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். விருப்பமான சட்னியுடன் சூடாகப் பரிமாறவும். சாட் மசாலா தூவியும் பரிமாறலாம்.