மாதுளம் பழம் மற்றும் ரோஸ் வாட்டர் கப் கேக்



தேவையான பொருட்கள்

கோதுமை மாவு:110 கிராம், சர்க்கரை:110 கிராம், வெண்ணெய்:100 கிராம், முட்டை:2 (பெரியது), பேக்கிங் பவுடர்:1 டீஸ்பூன், ரோஸ் வாட்டர்:1 டேபிள் ஸ்பூன், மாதுளை சாறு:1 டேபிள் ஸ்பூன்(அரைக்க வேண்டாம் நசுக்கி சாறு எடுக்கவும்), பால்:50 மில்லி.மேலே அலங்கரிக்க (வெந்தபின்)விப்பிங் கிரீம் - தேவைக்கேற்ப (ரோஸ் வாட்டர் சிறிது கலந்து கொள்ளவும்), மாதுளை முத்துகள் - 1 கப்.

செய்முறை

ஒரு பாத்திரத்தில் வெண்ணெயையும், சர்க்கரையையும் சேர்த்து எலக்ட்ரிக் பீட்டர்கொண்டு நன்கு அடிக்கவும்.பின் அதில் முட்டையை ஒவ்வொன்றாக சேர்த்து கலக்கவும்.பின் அதில் மாதுளை சாறு மற்றும்   ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு கலக்கவும்.அதில் கோதுமை மாவு, பேக்கிங் பவுடர் ஆகிய வற்றை சிறிது பால் ஊற்றி கட்டி யில்லாமல் கலக்கி அந்த கலவையை அவனில் 15-20 நிமிடங்கள் 150 C யில் பேக் செய்யவும். பிறகு  அலங்கரிக்கவும்.