ரெயின்போ கப் கேக்



தேவையான பொருட்கள்

கோதுமை மாவு :240 கிராம், சர்க்கரை:240 கிராம், உப்பு:1/4 டீஸ்பூன், பேக்கிங் பவுடர்: ஒரு டீஸ்பூன், வெண்ணெய்:100 கிராம், பால்:200 மில்லி, வெனிலா எசென்ஸ்:1 டீஸ்பூன், ஃபுட் கலர்: சிவப்பு, மஞ்சள், பச்சை, ஊதா தேவைக்கு ஏற்ப.மேலே அலங்கரிக்க: (வெந்தபின்) சாக்லெட் கலர் ஸ்பிரின்கில்ஸ்: தேவையெனில்,வெண்ணெய்: 100 கிராம்,ஐசிங் சுகர்: 200 கிராம், வெனிலா எசன்ஸ் : 1 டீஸ்பூன் அல்லது விப்பிங் கிரீம்.

செய்முறை

ஒரு பாத்திரத்தில் வெண்ணெயையும், சர்க்கரையையும் எலெக்ட்ரிக் பீட்டர் கொண்டு நன்கு அடிக்கவும்.பின் அதில் முட்டை, வெனிலா எசென்ஸ் சேர்த்து அடிக்கவும்.பின் அதில் கோதுமை மாவு, உப்பு, பேக்கிங் பவுடர் போட்டு பால் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி ஹேண்ட் பீட்டர் கொண்டு நன்கு கலக்கவும்.இந்த கலவையை நான்காக பிரித்து நான்கு கலர்களையும் சேர்த்து வைக்கவும். பின் கப்பில் (பேப்பர் கப்) 4 கலர் கேக் கலவையை சேர்த்து அவனில் 15-20 நிமிடங்கள் 150 C யில் பேக் செய்யவும். ஆறிய பின் அதன்மேல் பட்டர் கிரீம் அல்லது விப்பிங் கிரீம் போட்டு அதன்மேல் கலர் sprinkles தூவி அலங்கரிக்கவும்.