ஆப்பிள் லவங்கப்பட்டை கப் கேக்



தேவையான பொருட்கள்

ஆப்பிள் : 1 (தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்), பேப்பர் கப் : 6-8, கோதுமை மாவு : 110 கிராம், நாட்டு சர்க்கரை : 80 கிராம் (Brown Sugar), பட்டை பொடி :1 டீஸ்பூன், உப்பு: 1 சிட்டிகை,சோடா உப்பு:1 டீஸ்பூன், ஆயில்: 80 மில்லி,முட்டை: 2 (சிறியது).

செய்முறை

முதலில் முட்டையை எலக்ட்ரிக் பீட்டர் (Electric blender) கொண்டு அடிக்கவும்.பிறகு அதில் ஆயில் மற்றும் நாட்டு சர்க்கரை சேர்த்து கலக்கவும்.பிறகு கோதுமை மாவு, சோடா உப்பு மற்றும் பட்டை பொடி சேர்த்து egg beater (Hand whisker) கொண்டு நன்கு கலக்கவும்.பிறகு அதை பிரித்து சிலிக்கான் கப்பில் பேப்பர் கப் போட்டு நிரப்பி 150 C யில் 15 நிமிடம் பேக் modeயில் வைக்கவும். பிறகு அதை எடுத்து சூடாகவோ ஆறியோ பரிமாறலாம்.