செர்ரி கப் கேக்



தேவையான பொருட்கள்

கோதுமை மாவு: 110 கிராம், முட்டை: 2 (பெரியது), சர்க்கரை: 100 கிராம் (பொடித்தது),வெண்ணெய்:75 கிராம்,(உருக்கி ஆற வைத்துக் கொள்ளவும்)பேக்கிங் சோடா: 1/2 டீஸ்பூன்,பேக்கிங் பவுடர்: 1/2 டீஸ்பூன்,டூட்டி ஃபுரூட்டி: 25 கிராம்(பல வண்ணங்கள்),செர்ரி: 25 கிராம்(இரண்டாக நறுக்கவும்)(பழம் அல்ல).

செய்முறை

ஒரு பாத்திரத்தில் முட்டையை போட்டு எலக்ட்ரிக் பீட்டர் கொண்டு கலக்கவும்.பிறகு அதில் வெண்ணெய், எசென்ஸ், சர்க்கரை சேர்த்து கலக்கவும்.பின் ஹான்ட் பீட்டர் கொண்டு கோதுமை மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா சேர்த்து கட்டியில்லாமல் கலக்கவும்.பின் அதில் டூட்டி ஃபுரூட்டி மற்றும் செர்ரியை சேர்த்து அந்த கலவையை பிரித்து சிலிக்கான் மோலின் மேல் பேப்பர் கப்பை வைத்து அதில் கலவையை நிரப்பவும்.பின் அவனில் 15-20 நிமிடங்கள் 150 C யில் பேக் செய்யவும்.பிறகு அதை எடுத்து சூடாகவோ ஆறியோ பரிமாறலாம்.