ஈஸி ஆரஞ்ச் ஸ்பான்ச் கப் கேக்



தேவையான பொருட்கள்  

கோதுமை மாவு:150 கிராம், வெண்ணெய்:150 கிராம், முட்டை:3 (அடித்து தனியாக வைக்கவும்), பேக்கிங் பவுடர்:1 டீஸ்பூன், சர்க்கரை:150 கிராம் (பொடித்தது), ஆரஞ்சு:1 (பெரியது தோல் துருவியது) ஆரஞ்சு ஜூஸ்:1 டேபிள்ஸ்பூன்.

செய்முறை

ஒரு பாத்திரத்தில் வெண்ணெயையும், சர்க்கரையையும் நன்கு அடிக்கவும்.பின் அதில் முட்டை சேர்த்து நன்கு அடிக்கவும்.பின் அதில் கோதுமை மாவு, பேக்கிங் பவுடர் போட்டு கட்டியில்லாமல் கலக்கவும். கடைசியாக அதில் துருவிய ஆரஞ்சு தோல்  மற்றும் ஆரஞ்சு ஜூசை கலந்து அந்த கலவையை அவனில் 15-20 நிமிடங்கள் 150 C யில் பேக் செய்யவும். ஆறிய பின் பட்டர் கிரீம் டாப்பிங் போட்டு அதன் மேல் ஆரஞ்சு தோல் மெல்லிசாக  நறுக்கியதை போட்டு பரிமாறவும்.