எக்லெஸ் வெனிலா கப் கேக்



தேவையான பொருட்கள்

கோதுமை மாவு: 125 கிராம்,பேக்கிங் பவுடர்: 1/2 டீஸ்பூன்,சர்க்கரை: 125 கிராம் (பொடித்தது),வெண்ணெய்: 100 கிராம்,பால் : 100 மில்லி, வெனிலா
எசென்ஸ்: 1 டீஸ்பூன், வினிகர்: 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை

ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, பேக்கிங் பவுடர், சர்க்கரை கலந்து வைக்கவும்.மற்றொரு பாத்திரத்தில் வெண்ணை, பால், எசென்ஸ் மற்றும் வினிகர் ஊற்றி நன்கு கலந்து அதில் கோதுமை மாவு கலவையை கலந்து அவனில் 15-20 நிமிடங்கள் 150 C யில் பேக் செய்யவும். வேகவைத்து எடுத்து சூடாகவோ ஆறியோ பரிமாறலாம்.