டார்க் சாக்லெட் டிலைட் கப் கேக்



தேவையான பொருட்கள்

கோதுமை மாவு:125 கிராம், சர்க்கரை:125 கிராம், முட்டை:4 (சின்னது) 3 (பெரியது), டார்க் சாக்லெட்:50 கிராம் (துருவியது), வெனிலா எசென்ஸ்:1 டீஸ்பூன், வெண்ணெய்:100 கிராம், பேக்கிங் சோடா:1/2 டீஸ்பூன், பேக்கிங் பவுடர்:1/2 டீஸ்பூன்.மேலே அலங்கரிக்க (வெந்தபின்) டார்க் சாக்லேட்டை உருக்கி கேக்கின் மேல் ஊற்றி அதன் மேல் சாக்லெட் Sprinkles அல்லது சால்லெட் போட்டு அலங்கரிக்கவும்.சாக்லெட் வெர்மிசெனி அல்லது சாக்கோ சிப்ஸ் அல்லது சில்வர் பால்ஸ்.

செய்முறை

ஒரு அகலமான பாத்திரத்தில் வெண்ணெய் போட்டு கைகளால் நன்கு தேய்க்கவும்.பின் அதில் கோதுமை மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, எசென்ஸ் ஆகியவற்றை சேர்த்து நன்கு கட்டியில்லாமல் தேய்க்கவும்.பின் அதில் முட்டை கலவையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கட்டி இல்லாமல் நன்கு கலக்கவும்.கடைசியாக அதில் துருவிய சாக்லெட்டை போட்டு அதை பிரித்து பேப்பர் கப்பில் ஊற்றி 15 - 20 நிமிடம் வேக வைத்து எடுக்கவும். (வேகும் வரை) பின் அதன் மேல் உருக்கிய சாக்லெட்டை ஊற்றி அதன் மேல் சாக்லெட் வெர்மிசெனி தூவி குழந்தைகளுக்கு கொடுக்கவும்.