தேன் கப் கேக்



தேவையான பொருட்கள்

பேப்பர் கப்: 5 To 6,கோதுமை மாவு: 125 கிராம்,சர்க்கரை: 25 கிராம்,உப்பு: 1/4 டீஸ்பூன்,பேக்கிங் பவுடர்: 1 டீஸ்பூன்,முட்டை: 1 (பெரியது),வெண்ணெய்: 50 கிராம்(உருக்கி ஆற வைத்துக் கொள்ளவும்),பால் : 50 மில்லி.

செய்முறை

ஒரு பாத்திரத்தில் முட்டையை சேர்த்து எலக்ட்ரிக் பீட்டர் (அ) ஹேண்ட் பீட்டர் கொண்டு அடிக்கவும்.பின் அதில் வெண்ணை, பால், தேன், சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும்.பின் இதில் கோதுமை மாவு, உப்பு, பேக்கிங் பவுடர் ஆகியவற்றை சேர்த்து கட்டியில்லாமல் கலக்கவும்.பிறகு அந்த கலவையை பிரித்து சிலிக்கான் கப்பின் மேல் பேப்பர் கப்பை வைத்து கலவையை நிரப்பவும்.பின் அவனில் 15-20 நிமிடங்கள் 150 C யில் பேக் செய்யவும்.பிறகு அதை எடுத்து சூடாகவோ ஆறியோ பரிமாறலாம்.குறிப்பு: கேக் வெந்துவிட்டதா என்று அறிய பல் குத்தும் குச்சியை கேக்கின் நடுவே குத்தி பார்க்கவும்.