காபி கப் கேக்



தேவையான பொருட்கள்

கோதுமை மாவு:150 கிராம், கோகோ பவுடர்:25 கிராம், இன்ஸ்டன்ட் காபி பவுடர்:1 டேபிள் ஸ்பூன் (சுடு தண்ணீரில் ஊற்றி கரைத்து வைக்கவும்), பேக்கிங் பவுடர்:1 டீஸ்பூன், முட்டை:3 (பெரியது), சர்க்கரை:150 கிராம், வெண்ணெய்: 150 கிராம், பால்:100 மில்லி.
மேலே அலங்கரிக்க:  (வெந்தபின்)விப்பிங் கிரீமில் கொஞ்சம் காபி எசென்ஸை கலந்து கேக்கின் மேல் தடவி காபி பவுடரை தூவவும்.

செய்முறை

ஒரு பாத்திரத்தில் வெண்ணெயையும், சர்க்கரையையும் சேர்த்து எலக்ட்ரிக் பீட்டர் கொண்டு நன்கு அடிக்கவும்.பின் அதில் முட்டையை சேர்த்து கலக்கவும்.பின்பு காபி எசென்ஸ் பாலில் போட்டு நன்கு கலக்கவும். பின்னர் அதில் ஹேண்ட் பீட்டர் கொண்டு கோதுமை மாவு, உப்பு, பேக்கிங் பவுடர், கோகோ பவுடர் சேர்த்து கட்டியில்லாமல் கலக்கவும்.பின் இந்த கலவையை கப்பில் போட்டு வேக வைத்து எடுத்து ஆற வைத்து அலங்கரிக்கவும்.