சுட்டிகளுக்கான ஸ்நாக்ஸ்...



குழந்தைகள் விரும்பி சாப்பிடும் கேக்குகளை மைதாவில் செய்வது தான் வழக்கம். கோதுமை மற்றும் சிறுதானியங்களில் கூட கேக்குகளை செய்யலாம் என்கிறார் குன்னூரை சேர்ந்த நித்யா நடராஜன்.
குழந்தைகள் மட்டும் இன்றி பெரியவர்கள், வயதானவர்கள் சாப்பிடும் வகையில் நாட்டு சர்க்கரை, கோதுமை மாவு சேர்த்து கப் கேக்குகள் தயாரிப்பதில் இவர் எக்ஸ்பர்ட். இவருக்கு பேக்கிங் பிடித்தமானது என்பதால் வீட்டில் இருந்தபடியே ஆர்டரின் பேரில் தயாரித்து கொடுத்து வருகிறார். இந்த இதழில் 30 வகையான கப் கேக்குகள் பற்றி விளக்க இருக்கிறார் நித்யா!   

பேக்கிங் மற்றும் அலங்கரிக்க

பேக்கிங்  

மைக்ரோவேவ் அவன் என்றால், ஃபிரிஹீட் செய்து 180C யில் 15 முதல் 20 நிமிடம் வேக வைக்கவும்.
OTG என்றால் 200C,Toast modeல் 10 நிமிடம் ஃபிரிஹீட் செய்து, 150C யில் Bake modeல் 15-20 நிமிடம் வேக வைக்கவும்.

சாக்லெட் டாப்பிங்

ஒரு பாத்திரத்தில் தண்ணிர் ஊற்றி, அதனுள் மற்றொரு பாத்திரத்தை வைத்து வெண்ணெய் மற்றும் டார்க் சாக்லெட்டை சேர்த்து உருக்கினால் சாக்லெட் டாப்பிங் ரெடி.

ஐசிங் சுகர் டாப்பிங்

பொடித்த சர்க்கரையில் பால் கலக்க வேண்டும்.

சுகர் சிரப் செய்முறை

2 - டேபிள் ஸ்பூன் தேன், 2 - டேபிள் ஸ்பூன் சர்க்கரை, சிறிது தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் வரை கொதிக்க விடவும்.

பட்டர் கிரீம்

100 கிராம் வெண்ணையை பீட்டர் கொண்டு அடிக்கவும். அதில் பொடித்த சர்க்கரை
200 கிராம் சேர்த்து நன்கு அடிக்கவும். இதனுடன் பால் மற்றும் வெனிலா எசென்ஸ் 1 டீஸ்பூன் சேர்த்து கலக்கவும்.

விப்பிங் கிரீம்

விப்பிங் கிரீம் 200 மி.லி எலெக்ட்ரிக் பீட்டர் கொண்டு நுரைக்க அடிக்கவும். அதில் ஒரு டேபிள்ஸ்பூன் பொடித்த சர்க்கரை, ஒரு டீஸ்பூன் வெனிலா எசென்ஸ் சேர்த்து நன்கு அடிக்கவும்.

தொகுப்பு: ப்ரியா