காசிமேடு மீன் குழம்புஎன்னென்ன தேவை?

மீன் -1/2கிலோ ,
சின்ன வெங்காயம் - 2,
தக்காளி - 5,
பச்சை மிளகாய் - 5,
தேங்காய் – 1/2மூடி,

இவைகளை அரைத்துக் கொள்ளவும்.

சோம்பு , சீரகம் – 1/2ஸ்பூன்,
க.எண்ணெய் – 100மிலி,
கடுகு,சீரகத்தூள் , மிளகுத்தூள் - 1/2ஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/2ஸ்பூன், மல்லித்தழை - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு.
 
எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, சோம்பு, சீரகம் சேர்த்து பொரிந்தவுடன் அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து சிறிது நேரங்கழித்து  மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். பிறகு சிறிது நீர் ஊற்றி மூடி விடவும். பின்பு மீனை சேர்த்து வெந்தவுடன் சீரகத்தூள், மிளகுத்தூள்  சேர்த்து மல்லித்தழை சேர்த்து இறக்கி விடவும்.