நண்டு பொடி மாஸ்
என்னென்ன தேவை?
வேக வைத்த நண்டு சதையை எடுத்துக் கொள்ளவும்- 200 கிராம். வெங்காயம் - 2, பச்சை மிளகாய் - 3, கறிவேப்பிலை - சிறிதளவு, க.எண்ணெய் – 700 மிலி, சீரகம் , சீரகத்தூள், மிளகுத்தூள் –- 1/2 ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
 எப்படிச் செய்வது?
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சீரகம் சேர்த்து பொரிந்தவுடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். பின்பு நண்டை சேர்த்து நன்றாக வதக்கி உப்பு சேர்த்து சிறிது நேரம் கழித்து மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து இறக்கி விடவும்.
|