கருவாட்டுத் தொக்கு



என்னென்ன தேவை?

முள் இல்லாத கருவாடு - 200 கிராம்,
வெங்காயம் - 2,
பச்சை மிளகாய் - 2,
 தக்காளி - 1,
நசுக்கிய பூண்டு - 5 பல்,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள்- 2  டீஸ்பூன்,
வெந்தயம், சோம்பு - 1/2 டீஸ்பூன்,
சோம்புத் தூள்- 1/2 டீஸ்பூன்,
நல்லெண்ணெய் - 100 மிலி,
புளி- 1/2 கப் ,
உப்பு, கறிவேப்பிலை - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?


பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடு செய்யவும். வெந்தயம், சோம்பு போட்டு பொரிந்தவுடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து  கிளறவும். வதக்கிய பின்பு பூண்டு சேர்க்கவும், தக்காளியை சேர்த்துக் கிளறவும்.மஞ்சள் தூள், மிளகாய் தூள், சோம்புத்தூள் சேர்த்துக் கிளறி  அரைத்த கருவாட்டை அதில் சேர்க்கவும். பின்பு புளி சிறிதளவு சேர்த்து தேவையான உப்பை சேர்த்து நன்கு வத்திய பிறகு இறக்கவும்.