காளான் மிளகு வறுவல்என்னென்ன தேவை?

காளான் - 200 கிராம்,
வெங்காயம் - 2,
நறுக்கிய பச்சை மிளகாய் சிறிது,
தக்காளி - 2,
இஞ்சி, பூண்டு விழுதுகள் - சிறிதளவு,  
மல்லித்தூள், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மிளகுத்தூள்,  சோம்பு, க.எண்ணெய், சோம்புத்தூள், உப்பு - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?


பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சோம்பை சேர்த்து பொரிந்தவுடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். சிவந்து வந்ததும்  இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். சிறிது நேரம் கழித்து தக்காளி சேர்த்து பிறகு காளானை சேர்த்து வதக்கிய பிறகு மஞ்சள்  தூள், மிளகாய்த்தூள்,  மல்லித்தூள், சோம்புத்தூள், உப்பு சேர்த்து வதக்கிய பிறகு சிறிது நீர் ஊற்றி மூடி விடவும். சிறிது நேரம் கழித்து  மிளகுத்தூள் சேர்த்து இறக்கவும்.