விரால் மீன் குழம்பு
என்னென்ன தேவை?
விரால் மீன் - 1/2 கிலோ , சின்ன வெங்காயம் - 100 கிராம் , பச்சை மிளகாய் - 3, தக்காளி - 2, நல்லெண்ணெய் - 100 மிலி , வெந்தயம், சோம்பு - 1 டீஸ்பூன், மஞ்சள் தூள், மல்லித் தூள் - 1 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன், சோம்புத்தூள் - 1/2 டீஸ்பூன் , புளி - 1 கப், உப்பு - தேவையான அளவு, கறிவேப்பிலை, மல்லித்தழை - சிறிதளவு.
 எப்படிச் செய்வது?
பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெயை வைத்து சூடேற்றவும், வெந்தயம், சோம்பு சேர்த்து பொரிந்தவுடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து கிளறிய பின் தக்காளி சேர்க்கவும். வதங்கியபின் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், சோம்புத் தூள் சேர்த்து வதக்கிய பின் புளி கரைசல் சேர்க்கவும். பின் சிறிது தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து மூடி வைக்கவும். சிறிது கொதித்தவுடன் கொத்தமல்லித் தூவி இறக்கவும்.
|