எறா மிளகு வறுவல்



என்னென்ன தேவை?

எறா -250 கிராம்,
வெங்காயம் - 2 ,
தக்காளி - 1 ,
பச்சை மிளகாய் - 3 ,
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன் ,
கடலெண்ணெய் - 50 மிலி ,
சீரகம் - 1 டீஸ்பூன் ,
மிளகாய், மல்லித்தூள் - 1/2 ஸ்பூன்,  
சோம்புத் தூள் - 1 டீஸ்பூன்,
மிளகுத் தூள்- 1 ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு.

எப்படிச் செய்வது?    

பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடு ஏற்றிய பின் எண்ணெயை ஊற்றவும். சீரகம் போட்டு பொரிந்தவுடன் வெங்காயம், பச்சை மிளகாய்  சேர்த்து நன்கு வதக்கவும். சிவந்தவுடன் இஞ்சி பூண்டு விழுதை போட்டு நன்றாக வதக்கவும். அதில் தக்காளியை சேர்க்கவும்.  வதங்கியவுடன் எறாவை அதில் போட்டுக் கிளறவும். பின்பு மிளகாய்த்தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், சீரகம் கோம்புத் தூள் சேர்த்து  கிளறி தேவையான உப்பு போட்டு வற்றிய பின்பு மிளகுத்தூள் சேர்த்து இறக்கவும்.