எறா குழம்பு
 
 
என்னென்ன தேவை?
  எறா - 200 கிராம்,  சின்ன வெங்காயம் - 200 கிராம் ,  பச்சை மிளகாய் - 3 ,  தக்காளி - 2 ,  கடலெண்ணெய் - 100 மிலி ,  மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,  மிளகாய்த்தூள் - 1 1/2 ஸ்பூன்,  மல்லித் தூள் - 1 1/2 ஸ்பூன்,  சீரக தூள், சோம்புத் தூள் - 1/2 டீஸ்பூன்,  புளி - 1 கப்,  உப்பு - தேவையான அளவு,  தேங்காய்ப்பால் - 1 கப்,  வெந்தயம், சோம்பு - 1/2 டீஸ்பூன்.
   எப்படிச் செய்வது?
  பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடாக்கி எண்ணெய் ஊற்றவும் பின்பு வெந்தயம், சோம்பு போட்டு பொரிந்தவுடன், வெங்காயம், பச்சை  மிளகாய் சேர்த்து வதக்கி கொள்ளவும் பின்பு அதில் தக்காளி, எறாவை போட்டு கிளறவும். பிறகு சிறிது நேரம் கழித்து மஞ்சள் தூள்,  மிளகாய்த்தூள், மல்லித்தூள், சோம்பு, சீரகம் தூள், உப்பு சேர்த்து கிளறி. புளிக்கரைசலை ஊற்றவும். பின்பு தண்ணீரை சேர்த்து கொதிக்க  விடவும். பின்பு தேங்காய்ப்பாலை ஊற்றி ஒரு கொதியில் இறக்கி விடவும்.
 
 
  
 
 |