பள்ளத்தூர் நண்டு குழம்பு



என்னென்ன தேவை?

நண்டு - 3 ,
சின்ன வெங்காயம் - 200 கிராம் ,
பச்சை மிளகாய் - 3,
தக்காளி - 2 ,
உரித்த பூண்டு - 6 பல் ,
கடலெண்ணெய் - 100 மிலி ,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 1 1/2 ஸ்பூன் ,
மல்லித்தூள் - 1 1/2 ஸ்பூன் ,
சோம்புத்தூள் - 1/2 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
சோம்பு - 1/2 டீஸ்பூன் ,
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு.

எப்படிச் செய்வது?


பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடாக்கி எண்ணெய் ஊற்றவும். பின்பு சோம்பு பொரிந்தவுடன் வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து  சிவந்த நிறத்தில் வதக்கிக் கொள்ளவும். பிறகு தக்காளி சேர்த்து வதக்கிய பிறகு நண்டை சேரத்து வதக்கி 3 நிமிடம் மூடி வைக்கவும்.  பிறகு மஞ்சள் தூள், மல்லித்தூள், மிளகாய்த்தூள், சோம்புத்தூள், உப்பு சேர்த்து சிறிது நீர் ஊற்றி வற்ற விடவும். பின்பு மிளகுத்தூள்  சேர்த்து இறக்கவும்.