மீன் தொக்குஎன்னென்ன தேவை?

சிறு துண்டுகளாக மீன் -200 கிராம்,
நல்லெண்ணெய் –- 100 மிலி,
சோம்பு - சிறிதளவு,
வெந்தயம் - சிறிதளவு,
நசுக்கிய பூண்டு - 5,
பெருங்காய பவுடர் - சிறிதளவு,
அரைத்த தக்காளி - 5 கிராம்,
மஞ்சள் தூள் – 1ஸ்பூன்,
மிளகாய்த்தூள் – 2 ஸ்பூன்,
சோம்புத்தூள் - 1/2 ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி சோம்பு, வெந்தயம் சேர்த்து பொரிந்தவுடன், நசுக்கிய பூண்டை சேர்த்து நன்றாக  வதக்கியவுடன் மிளகாய்த்தூள், சோம்புத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். அதில் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும். வதக்கிய  பிறகு மீனை அதில் சேர்த்து, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். L.G பவுடர் சேர்த்து சிறிது நேரம் கழித்து இறக்கவும்.