மட்டன் கோலாஎன்னென்ன தேவை?

எலும்பில்லாத மட்டன் -1/2 கிலோ ,
வெங்காயம் - 2,
பச்சை மிளகாய் - 3,
தக்காளி - 1,
கடலெண்ணெய் – 700 மிலி,
சோம்பு  , மிளகாய்த்தூள்,
மஞ்சள் தூள், மல்லித்தூள், சீரகம், சோம்புத்தூள் – - 1/2ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
 இஞ்சி, பூண்டு விழுது –- 1/2ஸ்பூன்,
பொட்டுக்கடலை பவுடர் – - 1/2 ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

மட்டனை வேக வைத்து அரைத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடு செய்யவும். சோம்பு சேர்த்து பொரிந்தவுடன்  ெவங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி சிவந்தவுடன் இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும். சிறிது நேரம்  கழித்து தக்காளி சேர்த்து வதக்கியவுடன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகம், சோம்புத்தூள், உப்பு சேர்த்து கிளறவும். பிறகு  பொட்டுக்கடலை பவுடரைத் தூவி, அரைத்த மட்டனையும் சேர்த்து கெட்டியாகும் வரை கிளறவும். பிறகு ஆற வைத்து உருண்டை பிடித்து  எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.