சப்புக் கொட்ட வைக்கும் செட்டிநாடு உணவுகள்தமிழர் விருந்தோம்பலிலேயே பெயர் பெற்றவர்கள் செட்டிநாட்டுக்காரர்கள். இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், வீட்டுப் பெண்களால்  அரைக்கப்படும் செட்டிநாட்டு மசாலாவே முதன்மையான காரணம் என்கிறார்கள். இந்தியாவில் எந்த நகரத்துக்குச் சென்றாலும், சின்ன  ஹோட்டல் முதல் ஸ்டார்  ஹோட்டல் வரை ‘செட்டிநாடு உணவு கிடைக்கும்’ என்ற விளம்பரத்தைப் பார்க்கலாம்.

காரைக்குடி உணவுகளின் சிறப்பு வாய்ந்த வள்ளுவர்கோட்டம் ‘தென்னகம்’ உணவகத்தின் செஃப் பரசுராமன் ரெசிப்பிக்களை செய்து காட்டி  குறிப்புகளை தந்துள்ளார். மலேசியா, சிங்கப்பூர், ஓமன் போன்ற நாடுகளில் நமது காரைக்குடி உணவுகளை சமைத்து  அந்நாட்டுக்காரர்களை  சமையலில் அசத்தியவர். ‘‘சொந்த ஊர் காரைக்குடி பக்கம் குருந்தம்பட்டு. நான் சமையல் கலைஞரா இருந்தாலும் என் அம்மா லட்சுமி  சொல்லி தந்த வீட்டு சமையல் ஃபார்முலாைவதான் கடைபிடிக்கிறேன். வீட்ல அரைக்கிற மசாலாதான் முக்கியம். அசைவத்துக்கு சின்ன  வெங்காயம் தான் பெஸ்ட்.

தோல் நீக்கி உரல்ல இடிச்சு அப்படியே நல்லெண்ணெய்ல வதக்கணும். பட்டை, சோம்பு, சீரகம், மிளகு, பூண்டு... எல்லாம் தரமா வாங்கி   உரல்ல இடிச்சு சமைக்கணுமே தவிர மிக்சில அரைக்கக் கூடாது. அப்படி செஞ்சா வாசம் போயிடும். நாட்டுக்கோழி செய்யறப்ப எங்க அம்மா  சொல்லி தந்த ஃபார்முலாவைத்தான் இங்கு கடைப்பிடிக்கறோம். கோழியை மஞ்சத்தண்ணீர்ல நல்லா சுத்தம்  செய்த பிறகு தான்  சமைக்கணும்” என்ற செஃப் பரசுராமன், செட்டிநாடு சமையல்களை இந்த இதழில் விருந்தாக வழங்கியுள்ளார்.

தொகுப்பு: ப்ரியா மோகன்