நெத்திலி வறுவல்
என்னென்ன தேவை?
என்னென்ன தேவை?
நெத்திலி மீன் - 1/2 கிலோ, எண்ணெய், உப்பு - தேவைக்கு, நறுக்கிய இஞ்சி, பூண்டு - தலா 1 டீஸ்பூன், சின்ன வெங்காயம் - 6, மிளகாய்த்தூள், மிளகுத்தூள் - தலா 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன், தோசைக்கல் மசாலா - 5 டேபிள்ஸ்பூன், மாங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன், கொத்தமல்லி - சிறிது.
 எப்படிச் செய்வது?
மீனில் தோசைக்கல் மசாலா சேர்த்து பிரட்டி பொரித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து வெங்காயம், இஞ்சி, பூண்டு வதக்கி மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்து வதக்கி அதில் பொரித்த மீனை சேர்த்து சிறு தீயில் வைத்து 5 நிமிடம் பிரட்டி எடுத்து மாங்காய்த்துருவல், கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
|