கேரளா மத்தி மீன் சாறு
என்னென்ன தேவை?
நசுக்கிய சாம்பார் வெங்காயம், தக்காளி - தலா 4, பச்சைமிளகாய் - 6, தனியாத்தூள் - 2 டீஸ்பூன், மத்தி மீன் - 1/2 கிலோ, தேங்காய்ப்பால் - 100 மி.லி., உப்பு, மிளகுத்தூள், பெருங்காயம் - சிறிதளவு, கொத்தமல்லித்தழை - சிறிது.
தாளிக்க...
கடுகு, மிளகு, சீரகம், வெந்தயம் - தலா 1/2 டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் - 50 மி.லி.
 எப்படிச் செய்வது?
மண்சட்டியில் வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், தனியாத்தூள் சேர்த்து நன்றாக வதக்கி, மத்தி மீன், தேங்காய்ப்பால் ஊற்றி கொதிக்கவிடவும். பின்பு தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து மீன் குழம்பில் கொட்டி உப்பு, மிளகுத்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து இறக்கும் பொழுது கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
|