லாப்ஸ்டர் வாழைப்பூ மசாலா
என்னென்ன தேவை?
லாப்ஸ்டர் (இறால்) - 1/2 கிலோ, எண்ணெய், உப்பு - தேவைக்கு, சீரகம் - 1 டீஸ்பூன், இடிச்ச பூண்டு - 5 பல், சாம்பார் வெங்காயம் - 6, கறிவேப்பிலை - சிறிது, பச்சைமிளகாய் - 2, தக்காளி - 2, நறுக்கிய குடைமிளகாய் - 1, கொத்தமல்லி - சிறிது.
தோசைக்கல் மசாலா அரைக்க...
மிளகு, தனியா, சீரகம் - தலா 25 கிராம், காய்ந்தமிளகாய் - 5, புளி - எலுமிச்சை அளவு.
 எப்படிச் செய்வது?
தோசைக்கல் மசாலாவை வறுத்து அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து சீரகம் தாளித்து, கறிவேப்பிலை, பூண்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளியை வதக்கி லாப்ஸ்டர், அரைத்த தோசைக்கல் மசாலா சேர்த்து 5 நிமிடம் வதக்கி குடைமிளகாய், கொத்தமல்லி தூவி இறக்கி வாழைப்பூ மட்டையில் போட்டு பரிமாறவும்.
|