மிக்ஸ் நூடுல்ஸ்
என்னென்ன தேவை?
இறால், வஞ்சிரம், கனவா - 300 கிராம், வேகவைத்த நூடுல்ஸ் - 1 கப், வெங்காயத்தாள் - 1/4 கப்.
வதக்க...
நல்லெண்ணெய் - 1/4 கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் - 3, நறுக்கிய இஞ்சி, பூண்டு - தலா 1 டீஸ்பூன்,
பச்சைமிளகாய் - 2,
நறுக்கிய கோஸ், குடைமிளகாய் - தலா 1/2 கப், சோயாசாஸ், மிளகு - தலா 1/2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு.
 எப்படிச் செய்வது?
கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி வதக்க கொடுத்த பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக நன்றாக வதக்கி பின் கோஸ், குடைமிளகாய், சோயாசாஸ், மிளகு, உப்பு, மீன் சேர்த்து வதக்கவும். கடைசியாக வெந்த நூடுல்ஸ், வெங்காயத்தாள் கலந்து சூடாக பரிமாறவும்.
|