பரலா ஜெர்க் ஃபிஷ்என்னென்ன தேவை?

பரலா மீன் - 1/2 கிலோ.

அரைக்க...

காய்ந்தமிளகாய் - 5,
மிளகு - 1 டீஸ்பூன்,
 லவங்கம் - 2,
தேன் - 1 டீஸ்பூன்,
பச்சைமிளகாய் - 2,
வெங்காயத்தாள் - 1/4 கப்,
சாம்பார் வெங்காயம் - 6,
கொத்தமல்லி - சிறிது,
இஞ்சி பூண்டு - தலா 1 டீஸ்பூன்,
எலுமிச்சைச்சாறு - பாதி பழம்,
நல்லெண்ணெய், உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?


அரைக்க கொடுத்த பொருட்களை நன்றாக அரைத்துக் கொள்ளவும். அதனுடன் மீனை கலந்து 1 மணி நேரம் ஊறவைத்து சூடான  எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுத்து பரிமாறவும்.