ஆந்திரா கெளுத்தி மீன் குழம்பு
என்னென்ன தேவை?
கெளுத்தி மீன் - 1/2 கிலோ, எண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன், கடுகு, சீரகம், வெந்தயம், பெருங்காயத்தூள் - தலா 1 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2, தக்காளி - 2, மிளகாய்த்தூள், தனியாத்தூள் - தலா 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன், புளி - எலுமிச்சை அளவு, காஷ்மீரி மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிது, உப்பு - தேவைக்கு.
 எப்படிச் செய்வது?
கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, சீரகம், வெந்தயம் தாளித்து பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, வெங்காயம், தக்காளியை வதக்கி மிளகாய்த்தூள், காஷ்மீரி மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள், புளிக்கரைசல் ஊற்றி சிறிது தண்ணீர், மீன் சேர்த்து கொதிக்கவிடவும். குழம்பு கொதித்து திக்காக வந்ததும் கொத்தமல்லித்தழையை தூவி இறக்கவும்.
|