விரால் மீன் கல் சோறு
என்னென்ன தேவை?
விரால் மீன் - 1 கிலோ, பாஸ்மதி அரிசி - 1 கப், கொத்தமல்லி - சிறிது.
வதக்க...
நல்லெண்ணெய், கடுகு, மிளகு, சீரகம், சோம்பு, வெந்தயம் - தலா 1/2 டீஸ்பூன், காய்ந்தமிளகாய் - 5, சாம்பார் வெங்காயம் - 100 கிராம், இஞ்சி பூண்டு விழுது - 25 கிராம், தக்காளி - 100 கிராம், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், தனியா தூள், சீரகத்தூள் - தலா 1 டீஸ்பூன், புளிக்கரைசல் - சிறிது, உப்பு - தேவைக்கு.
 எப்படிச் செய்வது?
மீனை வேகவைத்து கொள்ளவும். அரிசியை உதிர் உதிராக சாதமாக வடித்துக் கொள்ளவும். கடாயில் வதக்க கொடுத்த பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்றாக வதக்கி தூள் வகைகள், புளிக்கரைசல் சேர்த்து கெட்டியான மசாலாவாக வதக்கிக் கொள்ளவும். தோசைக்கல்லை சூடு செய்து மீன், சாதம், மசாலாவை சேர்த்து பிரட்டி கொத்தமல்லியைத் தூவி பரிமாறவும்.
|