வஞ்சிரம் மீன் பிரியாணி
என்னென்ன தேவை?
வஞ்சிரம் மீன் - 300 கிராம், தேங்காய்ப்பால் - 1 கப், வேகவைத்த பாசுமதி அரிசி - 1 கப், வதக்கிய வெங்காயம், முந்திரி, நெய், உப்பு - தேவைக்கு.
வதக்க...
கருஞ்சீரகம், மிளகு, ஏலக்காய் - தலா 1/2 டீஸ்பூன், சாம்பார் வெங்காயம் - 100 கிராம், பச்சைமிளகாய் - 5, தக்காளி - 100 கிராம், இஞ்சி பூண்டு விழுது - 25 கிராம், தயிர் - 1 கப், கொத்தமல்லி, புதினா - 1 கைப்பிடி.
 எப்படிச் செய்வது?
பாத்திரத்தில் வதக்க கொடுத்த பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக நன்றாக வதக்கி மீன், தேங்காய்ப்பால் சேர்க்கவும். பிறகு வேகவைத்த பாஸ்மதி அரிசியை சேர்த்து 10 நிமிடம் சிறு தீயில் தம் வைத்து இறக்கவும். கடைசியாக வதக்கிய வெங்காயம், முந்திரி, நெய் சேர்த்து கிளறி சூடாக பரிமாறவும்.
|