பூண்டு கொடுவா மீன் மசாலா



என்னென்ன தேவை?

கொடுவா மீன் - 1/2 கிலோ,
 நல்லெண்ணெய், உப்பு - தேவைக்கு,
நறுக்கிய பூண்டு - 5 பல்,
கறிவேப்பிலை, கொத்தமல்லி - தேவைக்கு.

அரைக்க...

மிளகு, தனியா, சீரகம் - தலா 1 டீஸ்பூன்,
சாம்பார் வெங்காயம் - 6,
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
புளி - எலுமிச்சை அளவு,
பூண்டு - 5 பல்.

எப்படிச் செய்வது?

அரைக்க கொடுத்த பொருட்களை நன்றாக வதக்கி அரைத்து அதனுடன் மீன் சேர்த்து பிரட்டி எண்ணெயில் வறுத்துக் கொள்ளவும். பூண்டு,  கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.