வாளை கருவாட்டு குழம்பு
என்னென்ன தேவை?
செக்கு எண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன், வெந்தயம், மிளகு, சீரகம் - தலா 1 டீஸ்பூன், நசுக்கிய பூண்டு - 5 பல், சாம்பார் வெங்காயம் - 6, மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன், கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிது, நறுக்கிய முருங்கைக்காய், கத்திரிக்காய், வேகவைத்த மொச்சை யாவும் கலந்தது - 1 கப், வாளை கருவாடு - 6 துண்டுகள், உப்பு - தேவைக்கு.
 எப்படிச் செய்வது?
கடாயில் எண்ணெயை காயவைத்து வெந்தயம், மிளகு, சீரகம் தாளித்து பூண்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கறிவேப்பிலை போட்டு நன்றாக வதக்கவும். பின்பு தேவையான அளவு தண்ணீர், உப்பு, முருங்கைக்காய், கத்திரிக்காய், மொச்சை, கருவாடு சேர்த்து கொதிக்க விடவும். நன்றாக கொதித்து குழம்பு பதத்திற்கு வந்ததும் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
|