ஃபிஷ் ஃபிங்கர்என்னென்ன தேவை?

வஞ்ஜரம் மீன் - 200 கிராம்,
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்,
உப்பு, சோம்புத்தூள், மஞ்சள் தூள் - தலா 1/4 டீஸ்பூன்,
முட்டை - 1,
பிரெட் க்ரம்ஸ் - 1 கப்,
பொரிக்க எண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

மீனின் முள் மற்றும் தோலை நீக்கி விட்டு நீளவாக்கில் கட் செய்து மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு, சோம்புத்தூள் சேர்த்து பிரட்டி கொள்ளவும்.  கிண்ணத்தில் முட்டையை நன்றாக அடித்துக் கொள்ளவும். பிரட்டிய மீனை முட்டையில் நனைத்து பிரெட் க்ரம்ஸில் பிரட்டி மீண்டும் முட்டை மற்றும்  பிரெட் க்ரம்ஸில் பிரட்டி கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் வைத்து மீன்களை பொரித்தெடுத்து டொமேட்டோ கெட்சப்,  மையோனைஸுடன் பரிமாறவும்.