மட்டன் சூப்



என்னென்ன தேவை?

மட்டன் - 1 கிலோ,
வெங்காயம் - 1,
தக்காளி - 2,
இஞ்சி பூண்டு விழுது, தனியாத்தூள் - தலா 2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
உப்பு - 1½ டீஸ்பூன்,
தயிர் - 4 டீஸ்பூன்,
கரம்மசாலாத்தூள், நல்லெண்ணெய் - தலா 1/2 டீஸ்பூன்,
தண்ணீர் - மட்டன் மூழ்கும் அளவு,
கொத்த மல்லித்தழை - சிறிது.

எப்படிச் செய்வது?

மட்டனை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். குக்கரில் மட்டன் மற்றும் மேலே கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்றாக கலந்து,  குக்கரில் விசில் போட்டு மூடி 25 நிமிடங்கள் வேகவைக்கவும். விசில் அடங்கியதும் சூப்பை கிண்ணத்தில் ஊற்றி மேலே மிளகுத்தூள்,  கொத்தமல்லியைத் தூவி சூடாக பரிமாறவும்.